பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரின் தமிழத்துறை சார்பில் இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கான வரவேற்பு விழா இன்று 5.8.2011 ஆம் நாளன்று காலை 11.00 மணியளவில் இனிதே தொடங்கியது. விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் டாக்டர் சத்யன் அவர்கள் தலைமையேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.ஐானகிராமன் முன்னிலை வகித்தார். சுற்றுலா மற்றும் மேலாண்மைத்துறைத் தலைவர் கலந்து கொண்டு புதிதாக பயில வந்திருக்கும் மாணவர்களை வாழ்த்தினார். தமிழ்த்துறையின் பேராசிரியர்கள் முனைவர்.சுமதி, முனைவர் பன்னீர்செல்வம், முனைவர் அறிவுராஐ், முனைவர் மனோகரன், முனைவர் செந்தில்குமார் வாழ்த்தினர்.
இயக்குனர் டாக்டர் சத்யன் தலைமையுரையில் பேருந்தில் ஏறி நாம் வசதியாக உடகார்ந்து பயணிக்க எந்த இடத்தைத் தேடுகின்றோமோ அது போல வாழ்க்கையில் எந்த இடத்தை அடைய வேண்டுமோ அந்த இடத்தை மாணவர்கள் அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்.
விழாவில் மாணவர் க.பெரியசாமி வரவேற்புரை வழங்கினார். மாணவர் முத்துக்குமார் நன்றி நவின்றார். விழா பிற்பகல் 12.40 மணியளவில் இனிதே நிறைவுற்றது.